சகலமும் நீயே……
பல்லவி
சகலமும் நீயே அகிலாண்டேச்வரி
அகிலமனைத்தையும் காத்திடும் தாயே
அனுபல்லவி
சுகபாணி கௌரி கேசவன் சோதரி
மகிடன் தலை கொய்த மாகாளி பைரவி
சரணம்
பகலவன் ஒளியை மிஞ்சுமொளியுடைவளே
சகலரும் அமைதியுடன் வணங்கிடும் வண்ணம்
முகமலரில் சங்கரரணிந்த தோடுடையவளே
புகழ் மிகு திருவானைக்காவிலுறைபவளே
குக பெருமானும் கணபதியும் பணியும்
மகாதேவியே மகேசன் துணைவியே
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவளே
புகலிடம் நீயென உனைச் சரணடைந்தேன்
துரிதம்
சுகசனகாதியர் நரர்சுரர் நான்முகன்
மகபதி ரதிபதி கரம் பணிந்தேத்தும்
No comments:
Post a Comment