அங்கம் பரிமளிக்கும்….
பல்லவி
அங்கம் பரிமளிக்கும் தங்க மீனாக்ஷியை
சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் பணிந்தேன்
துரிதம்
அங்கி குபேரன் நரர் சுரர் சுரபதி
ரதிபதி பசுபதி சரச்வதியின்பதி
கணபதி வேலன் சந்திரன் சூரியன்
அனைவரும் வணங்கி கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் கேசவன் சோதரியை
மங்காத புகழ் மேவும் ராஜமாதங்கியை
சரணம்
பொங்கரவணிந்த சங்கரனாரிடமமர்ந்த
பங்கஜவல்லியை பார் போற்றும் மலைமகளை
காஞ்சனமாலை மலையத்வஜன் பெற்ற
சிங்காரச்செல்வியை அங்கயற்கண்ணியை
No comments:
Post a Comment