मातः क्षणं स्नपय मां तव वीक्षितेन
मन्दाक्षितेन सुजनैरपरोक्षितेन ।
कामाक्षि कर्मतिमिरोत्करभास्करेण
श्रेयस्करेण मधुपद्युतितस्करेण ॥
மாத: க்ஷணம் ஸ்னபய மாம் தவ வீக்ஷிதேன
மந்தாக்ஷிதேன ஸுஜனை ரபரோக்ஷிதேன |
காமாக்ஷி கர்ம திமிரோத்கர பாஸ்கரேண
ச்ரேயஸ்கரேண மதுபத்யுதி தஸ்கரேண ||
-மூகபஞ்சதசி
‘மாத:’ - அம்மா ‘
க்ஷணம் ஸ்நபய மாம் தவ வீக்ஷிதேன’- உன்னுடைய கடாக்ஷத்துனால என்னை ஒரு க்ஷணம், நனைப்பாயாக, ‘ஸுஜனைரபரோக்ஷிதேன’ - உன்னுடைய கடாக்ஷம் புண்யசாலிகளால் தரிசிக்கப் பட்டது. ‘ மந்தாக்ஷிதேன’ - மந்தமா சலிச்சிண்டு இருக்கு. ‘காமாக்ஷி கர்ம திமிரோத்கர பாஸ்கரேண’ - என்னுடைய வினைகள் என்ற இருளைப் போக்கும் பாஸ்கரனாக, ஸூரியனாக உன்னுடைய கடாக்ஷம் இருக்கு. ‘ஸ்ரேயஸ் கரேண’ - எல்லா க்ஷேமமும் கொடுக்கக்கூடியது. ‘மதுபத்யுதி தஸ்கரேன’ - மதுபஹன்னா வண்டு. அந்த வண்டினுடைய ஒளியை உன்னுடைய கண்கள் அபகரிக்கிறதுன்னு சொல்றார். அதாவது கண்கள் வண்டு மாதிரி இருக்குங்கறதை சொல்றார். தாயே உன்னுடைய கடாக்ஷம் புண்யசாலிகளால் தரிசிக்கப் பட்டது. மந்தமா சலிச்சிண்டு இருக்கின்ற என்னுடைய வினைகள் என்ற இருளைப் போக்கும் பாஸ்கரனாக, ஸூர்யனாக, எல்லா க்ஷேமமும் கொடுக்கக்கூடியது உன்னுடைய கடாக்ஷம். வண்டு மாதிரி இருக்கின்ற உன்னுடைய கடாக்ஷம் எனும் வர்ஷத்தினால் என்னை ஒரு க்ஷணமேனும் நனைத்து உன்னருளை தர வேண்டும் அம்மா.
கண நேரமேனும்….
பல்லவி
கண நேரமேனும் நீ கண்டாலும் போதும்
காமாக்ஷி தேவியுன் மலரடி பணிந்தேன்
அனுபல்லவி
வணக்கத்துக்குரியவளே கேசவன் சோதரி
தணலேந்தும் நெற்றிக்கண் கொண்ட ஈச்வரி
சரணம்
பணிந்திடுமடியாரை கடைக்கண்ணால் காண்பவளே
குணமுடன் இருளை நீ்க்கிடும் சூரியனைப்போல்
வணங்கிடுமெனது பவ வினைப் பயன் தொலைய
அணங்கே உன் கருவண்டுக் கண்களாலெனையே
No comments:
Post a Comment