த்வயைவ ஜகதம்பயா புவனமண்ட³லம்ஸூயதே
த்வயைவ கருணார்த்ரயா ததபி ரக்ஷணம்நீயதே ।
த்வயைவ கரகோபயா நயனபாவகே ஹூயதே
த்வயைவ ஸதி காமயா1 ஜகதி ஸந்ததம்ஸ்தீயதே ॥
ஸதி தேவியான காமாக்ஷியே! லோகமாதாவான உன்னாலேயே இந்த பூமி ஸ்ருஷ்டிக்கப்பட்டது. அந்த லோகமானது க்ருபா ரஸம் நிறைந்த உன்னாலேயே ரக்ஷிக்கப்படுகிறது. பிறகு உக்ர கோபமுள்ள உன்னாலேயே நேத்ராக்நியில் ஹோமம் செய்யப்படுகிறது. காமகோடி என்கிற பெயருள்ள நீ மட்டுமே உலகில் சாச்வதமாக நிலை பெற்றிருக்கிறது.
நீ மட்டுமே…..
பல்லவி
நீ மட்டுமே சதம் காமாக்ஷி தேவி
காமகோடி அன்னையே உனையே துதித்தேன்
அனுபல்லவி
தாமரை நாபன் கேசவன் சோதரி
காமனைப் பழிக்கும் பேரழகுடையவளே
சரணம்
பூமண்டலம்தனையழகாய்ப் படைத்தவள் நீயே
சேமமுறக் கருணையுடன் காப்பவளும் நீயே
காமேச்வரி நீயேயதைக் கண்ணழலாலெரிப்பவளே
சாம முதல் வேதங்கள் கொண்டடுமுனைப் பணிந்தேன்
No comments:
Post a Comment