சக்தியின் வனப்பு...
பத்துவிரல் மோதிரம் எத்தனை பிரகாசமது
பாடகம் தண்டை கொலுசும்,
பச்சை வைடூரியம் இச்சையா இழைத்திட்ட
பாதச் சிலம்பினொலியும்
முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன மாலை வரி அழகும்,
முழுதும் வைடூரியம் புஷ்பரா கத்தினால்
முடிந்திட்ட தாலி அழகும்,
சுத்தமாயிருக்கின்ற காதினிற்
வைர கம்மலும்
செங்கையிற் நாக கங்கணமும்
ஜெகமெலாம் விலைபெற்ற முகத்தழகை
பெருக்கும் கூர்நாசியின் சிறப்பும் பெற்ற
மஹா விஷ்ணுவின் தங்கை சக்தி சிவரூபத்தை
அடியனாற் சொல்ல திறமோ
அழகான கருவிலியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை ஸர்வாங்க சுந்தரி உமையே.
உத்தமியே….
பல்லவி
உத்தமியே கருவேலி சர்வாங்க சுந்தரியே
நித்தமுனைப் பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
சத்தியகிரி நாதன் கேசவன் சோதரியே
எத்திசையும் புகழ் விளங்க அழகுடன் வாழ்ந்திடும்
சரணங்கள்
முத்தும் மாணிக்கமும் ரத்தினமும் பதித்த
பத்து விரல் மோதிரங்கள் அணிந்த பேரழகியே
நத்தணிந்த நாசியில் மூக்குத்தி மின்ன
சித்தும் வெள்ளிக்கொலுசும் பளபளக்க
பத்தரை மாற்று பசும் பொன்னில் அழகுடன்
மெத்தப் பளபளக்கும் புஷ்பராகம் வைடூரியம்
பதித்த மங்கலத் திருமாங்கல்யத்துடனே
நித்திய சுமங்கலியாய் வலம் வரும் பத்தினியே
முத்தாரம் மாலைகளணிந்த சங்குக் கழுத்தும்
சிற்றிடையில் அழகுடன் தங்க ஒட்டியாணமும்
சுத்தமான கரங்களில் நாக கங்கணமும்
சத்தம் கேட்கும் செவிகளில் வைரத் தாடங்கமும்
நெத்திக்கு மேலழகு பிறைச்சந்திரனும்
நெத்திச்சுட்டியும் வட்ட வடிவப் பொட்டும்
முத்துப் பல்லழகும் கொவ்வைச் செவ்வாயும்
அத்தனைக்கும் முத்தாய்ப்பாய்ப் பட்டுடையும் தரித்தவளே
No comments:
Post a Comment