வெவ்வேறு வடிவங்கள்: ஆச்சார்யாள் விளக்கம்!
🌷சாரதாம்பாளுக்கும், லலிதாம்பாளுக்கும் ஏதாவது வேற்றுமை உண்டா ? கிடையாது.🌷பராசக்தியின் வெவ்வேறு உருவங்கள் தாம் அவை. ஸெளந்தர்யலஹரியில், “அம்பாள் தன் கரங்களில் ஜபமாலை, அபயஹஸ்தம் போன்றவற்றை வைத்துக்கொண்டு எல்லா பக்தர்களையும் அனுக்ரஹம் செய்கிறாள்” என்று வர்ணனை உள்ளது.🌷மேலும், “சரத்கால நிலவொளியைப் போல் மாசற்றவள், கூந்தலில் நிலவைத் தரித்திருக்கிறாள்” என்றும் வர்ணனை வருகிறது. இவ்வாறு பகவத்பாதாள் அம்பாளை நோக்கி ஸ்தோத்திரம் செய்துள்ளார்.🌷இதிலிருந்து என்ன தெரிகின்றது ? சக்தியானது ஒன்றேதான். ஆனால் அவளது உருவங்கள் பலவிதமாக உள்ளன. ஒரு வடிவத்தை வைத்துக்கொண்டால் போதாதா? பல வடிவங்கள் தேவையா ? (தேவை. ஏனென்றால்) ஒவ்வொருவரின் ஆசைக்கிணங்க உருவத்தையும் மாற்றிக்கொள்கிறாள்.
சாரதாம்பாளும்…..
பல்லவி
சாரதாம்பாளும் லலிதாம்பாளும்
வேறல்ல ஒன்றென்றே அறிவாய் மனமே
அனுபல்லவி
பாரெங்குமடியார்கள் துதித்திடத் தோதாக
வெவ்வேறு வடிவெடுத்த கேசவன் சோதரியும்
சரணம்
நாரதரிந்திரன் சுக சனகாதியர்
நாரணன் நான்முகன் சிவனும் பணிந்திடும்
பூரணி காரணி புவனம் படைத்தவளும்
தாரணி போற்றும் அன்னையுமவளே
No comments:
Post a Comment