அந்தர விஷே அதி⁴க உர்மி த²தாம்ʼ ப⁴வானீ |
கா³ஊ ஸ்துதி தவ ப³ளே நமீனே ம்ருʼடா³னீ ||
ஸம்ʼஸாரனா ஸகள ரோக³ ஸமூள காபோ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³:க² காபோ || 12||
இந்த அழியும் உடலின் மீது அழியாத காதல் கொண்டுள்ளேன். நான் உன் பாடல்களை பாடும் போது, தலை குனிந்து வணங்குகிறேன். துன்பங்களுக்கு ஆதாரமான வேர்களை அழிப்பாயாக. "ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா மாதா, உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக.
அந்தரி சுந்தரி….
பல்லவி
அந்தரி சுந்தரி துர்கே உனப் பணிந்தேன்
வந்தருள் தந்தருள் கேசவன் சோதரி
துரிதம்
இந்திரன் நரர்சுரர் நந்தி நான்முகன்
சந்திரன் சூரியனனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
மந்திர யந்திரப் பொருளனைத்தும் நீயே
சந்ததம் உந்தன் நாமமே துதித்தேன்
சரணம்
சந்திரசேகரனின் மனம் கவர்ந்தவளே
இந்தினிளம்பிறை சூடிய ஓம்காரி
எந்தன் பவவினை களைந்தருள்வாயே
வந்தனை செய்தே உந்தனைப் பாடினேன்
No comments:
Post a Comment