ஸ்துதி ஸதகம் !ஸ்ரீ மூகபஞ்சசதீ !
ஸமரவிஜயகோடீ
ஸாதகானந்ததாடீ
ம்ருதுகுணபேடீ
முக்யகாதம்பவாடீ ।
முனினுதபரிபாடீ
மோஹிதா
ஜாண்டகோடீ
பரமஶிவவதூடீ
பாது மாம் காமகோடீ ॥ 101॥
யுத்தத்தில் ஜயக்கொடி போல் விளங்குகிறவளும் , துதிப்பவர்களுக்கு ஆனந்தத்தை கொடுப்பவளும், நற்குணங்களின் பெட்டகமாய் விளங்குபவளும், கதம்பவனத்தில் வாழ்பவளும், ரிஷிகளால் கொண்டாடப்படுபவளும், கோடி பிரும்மாண்டங்களை மயக்கி வைத்திருப்பவளும், பரசிவனின் மனைவியுமான காமகோடி ஸ்ரீ காமாக்ஷி என்னை பாதுகாக்கட்டும்.
இமம் பரவரப்ரதம் ப்ரக்ருதிரபஶலம் பாவனம்
பராபரசிதாக்ருதிப்ரகடனப்ரதீபாயிதம் ।
ஸ்தவம் படதி நித்யதா மனஸி
பாவயன்னம்பிகாம்
ஜகபரலமலம் மககரதிகரதஹஸம்ரஶாஷகண: ॥ 102
இயற்கை அழகு படைத்தவளும், அனைத்து குணங்களும், அவையற்ற நிலைகளை விளக்கும் தீபமாகத் திகழ்பவளுமான ஸ்ரீ காமாக்ஷி சிறந்த வரங்களை மனம் குளிர அருள்வாள்; தூய்மையைத் தருவாள்; தினமும் இந்த துதியை ஸ்ரீ காமாக்ஷியை மனதில் தியானித்து படிப்பவருக்கு தவமும் வேள்வியும் தேவையில்லை.
பரமேச்வரனின்…..
பல்லவி
பரமேச்வரனின் நாயகியைத் துதித்தேன்
வரத அபய கரம் நீட்டும் காமாக்ஷியை
அனுபல்லவி
நரர் சுரர் நாரதர் சுகசனகாதியர்
பிரமனும் பணிந்திடும் கேசவன் சோதரியை
சரணம்
ஆனந்தமளிப்பவளை ஜெயம் தருபவளை
முனிவர்கள் பணிந்திடும் நற்குணமுடையவளை
அகிலாண்ட கோடியை அடக்கியாள்பவளை
கதம்ப வனம் திகழும் நற்குணப் பெட்டகத்தை ….( பரமேச்வரனின்….)
வியக்கும் இயற்கையழகு படைத்தவள்
அயராது துதிப்பவர் மனங்குளிர வைப்பவள்
மயற்வற மதிதரும் கைவிளக்காயிருப்பவள்
நயமுடனவள் நாமமுரைப்பவர்க்கருளும்…..( பரமேச்வரனின்…)
No comments:
Post a Comment