ஓ ஜகந்நாதனே….
பல்லவி
ஓ ஜகந்நாதனே உனையே துதித்தேன்
மா ஜகந்நாயகியை மார்பினில் வைத்திருக்கும்
அனுபல்லவி
தேஜோ மயமானவனே திருமாலே கேசவனே
பூஜிக்குமடியாரை காத்தருள் புரிபவனே
சரணம்
உலகில் சிறந்த தேர் வலம் காணும்
தலங்களில் சிறந்த பூரி மாநகர் தனில்
பலபத்திரரும் சுபத்திரையுமுடனிருந்து
நலமுடன் கோயில் கொண்டு அழகுறக் காட்சி தரும்
No comments:
Post a Comment