தேவி சரச்வதி…..
பல்லவி
தேவி சரச்வதி உனையே துதித்தேன்
நாவிலமர்ந்தெனக்கு இசை ஞானம் தருவாயே
அனுபல்லவி
ஆவினங்கள் மேய்க்கும் கேசவன் துணைவியும்
மாவிடை வாகனன் நாயகியும் நேசிக்கும்
சரணம்
தேவரும் முனிவரும் நான் மறையும் நான்முகனும்
தேவேந்திரனும் யாவரும் பணிந்தேத்தும்
பூவிலமர் கலைமகளே சகலகலாவாணி
தூவி மலர் சொரிந்து உன்னருள் வேண்டினேன்
No comments:
Post a Comment