காளிகாம்பாளுன்…..
பல்லவி
காளிகாம்பாளுன் தாளினைப் பணிந்தேன்
வாளினையொத்த கூர் விழியுடைவளே
அனுபல்லவி
கோளினைப் படைத்தவளே கேசவன் சோதரியே
கேளிக்கையாகவே மூவுலகும் ஆள்பவளே
சரணம்
மாளிகை வாழ்வும் மணி முடியும் செல்வமும்
ஆளும் அரச போகமும் பதவியும் வேண்டேன்
நீலத்திரைகடலோரத்தில் நிலைத்திருப்பவளே
நாளுமுன் கழலடி நிழலொன்றே போதும்
No comments:
Post a Comment