தேவி நாராயணீயம்தசகம் எட்டு
ஸ்லோகம் (5)
சதுர்புஜா சங்ககதாரிபத்ம
தரா க்ருபாத்யை:ஸஹ சக்திஜாலைஹீ
ஸ்திதாஜலோபர்யம் அலாம்பரா த்வம்
ப்ரஹ்ருஷ்ட சித்தம் ஹரிமேவ,மாத்த//
நான்கு கைகளிலும் சங்கு சக்ர கதை பத்மத்துடன்
திவ்யமான வஸ்த்ரங்களும் ஆபரணங்களும்;அணிந்து
கொண்டு அனைக சக்திகளால், சூழப்பட்டு மிகுந்த
ஒளியுடன் ப்ரகாஸமாக தண்ணீரின் மேல் தேவி நின்று
கொண்டு புன்னகை செய்கிறாள்.,இதைப் பார்த்த
விஷ்ணு மிகுந்த ஆனந்தம் அடைகிறார்
சங்கும் சக்கரமும்…….
பல்லவி
சங்கும் சக்கரமும் கதையும் தாமரையும்
தன் கையிலேந்திடுமலைமகளைத் துதித்தேன்
அனுபல்லவி
எங்கும் நிறைந்திருக்கும் பங்கயச் செல்வியை
திங்கள் திரு முகத்தாளை திருவென்னும் பெயராளை
சரணம்
மங்கல அணிகலன்கள் பட்டாடை தரித்து
பொங்கும் எழிலோடு கடல் நடுவே எழுந்தருளும்
செங்கமலவல்லியை மகாலக்ஷ்மியை
செங்கண்மால் கேசவன் கண்டு மனம் களிப்படைந்தார்
No comments:
Post a Comment