சொப்பனத்தில்….
பல்லவி
சொப்பனத்தில் நான் கண்ட கண்ணனெந்தன்
சொந்தமாக மாட்டானோ தோழி
அனுபல்லவி
முப்பொழுதும் கேசவன் அவன் நினைவாகவே
எப்போதுமிருக்குமிந்த அடிமையின்
சரணம்
நப்பின்னையாக அவன் கரம் பற்றுவேனோ
ஒப்பிலாதவனுடன் பூமிப்பிராட்டி போல்
தப்பாமல் சேர்வேனோ தாரமாயவேனோ
இப்புவி போற்றும் ராதையாயாவேனோ
No comments:
Post a Comment