உத்தமியே….
பல்லவி
உத்தமியே வெண் கலையுடுத்திய கலைவாணி
நற்றமிழில் பாமாலை புனைந்துனைப் போற்றினேன்
அனுபல்லவி
அத்தன் சிவனும் கேசவனும் பிரமனும்
இத்தரணி மாந்தரும் கரம் பணிந்தேத்தும்
சரணம்
புத்தகமும் வீணையும் கரங்களில் ஏந்தி
நித்தமும் ஞானமும் கல்வியும் அளித்திடும்
முத்தமிழும் தந்தெனையே காத்தருள வேண்டுமென
சித்தத்திலிருத்தி பக்தியுடன் தினம் துதித்தேன்
No comments:
Post a Comment