அப்பனே மணிகண்டா…..
பல்லவி
அப்பனே மணிகண்டா ஹரிஹரசுதனே …(ஐ)
சுப்பிரமணியன் கணபதி சோதரனே
அனுபல்லவி
ஒப்புயர்வில்லா உயர்திரு சாஸ்தா
இப்பிறப்பிலெனைக் காக்கும் தெய்வமே
சரணம்
எப்போதும் நீயெந்தன் அருகிலிருந்திடவும்
இப்புவியில் தவறேதும் செய்யாமலிருக்கவும்
முப்போதுமுந்தன் நாமமே துதித்தேன்
முப்புவனமும் போற்றும் கலியுக க்கடவுளே
சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் ஐயப்பா
No comments:
Post a Comment