அதிசயமானவளே….
பல்லவி
அதிசயமானவளே அகிலாண்டேச்வரியே
துதித்தேன் உனதிரு கமல பதங்களையே
துரிதம்
ரதிபதி,சுரபதி, சரச்வதியின்பதி
பசுபதி,கணபதி, தேவ சேனாபதி
நிதிகளின் அதிபதி, கதிரவன்,முழுமதி,
துதித்திடும் பதங்களின் அதிபதியே தேவி
அனுபல்லவி
விதியையும் மாற்றும் வல்லமை படைத்தவளே
எதிலும் இயங்கும் இயற்கையே மாயே
சரணம்
மதுரையில் அரசாளும் மீனாக்ஷியே
பதி காசியில் விளங்கும் விசாலாக்ஷியே
மதியணிந்தவளே காஞ்சி காமாக்ஷியே
கதி நீயே தாயே கேசவன் சோதரியே
No comments:
Post a Comment