விச்வாம்பரி ஸ்துதி
பாபோ ப்ரபஞ்ச கரவா ப³தீ⁴ ரீதே பூரோ |
கோ²டோ க²ரோ ப⁴க³வதீ பண ஹும்ʼ தமாரோ ||
ஜாட³யாந்த⁴கார கரீ தூ³ர ஸுபு³த்³தி⁴ ஸ்தா²போ |
மாம் பாஹி ஓம்ʼ ப⁴க³வதீ ப⁴வ து³:க² காபோ || 9||
நான் மறுபடியும் பாவம் செய்யும் முன், என்னை அற வழிக்கு திருப்பு, அறியாமையில் மூழ்கி இருந்தாலும், நான் உன் குழந்தை யல்லவா!!!!, நான் செய்த பாவங்களின் விளைவுகளை பற்றி என்னை அறியச் செய். அஞ்ஞானம் என்னும் இருள்மாயையை அழிக்க வந்த பிரகாச ஞானச் சுடரே..."ஓம்" என்னும் பிரணவ மந்திர சொரூபமான துர்க்கா மாதா, உன்னை சரணடைகிறேன். பவ சாகரம் என்னும் இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து ரட்சிப்பாயாக.
மூலப்பிரகிருதியே…..
பல்லவி
மூலப்பிரகிருதியே விச்வாம்பரியே
பாலே சுசீலே உனையே துதித்தேன்
அனுபல்லவி
ஆலமுண்ட நீலகண்டன் பிரமன் மற்றும்
மாலன் கேசவன் உலகனைத்தும் படைத்தவளே
சரணம்
சீலமிகு துர்கே மந்திரப் பொருளே தாயே
பாலன் நானறியாமல் செய்த பிழை பொறுத்து
மேலும் பல பாவங்கள் புரியாமல் தடுத்தென்னை
ஞாலந்தனில் நீயே தடுத்தாட்கொள் தாயே
No comments:
Post a Comment