உனையே துணையென….
பல்லவி
உனையே துணையென நம்பினேனே ராமா
எனை இனியாட்கொள்ள இன்னுமென்ன தயக்கம்
அனுபல்லவி
நினைவிலும் கனவிலும் உன்னையே நினைத்தேன்
அனவரதமுமுன் நாமமே துதித்தேன்
சரணம்
வனம் சென்று தந்தையின் சொல்காத்த தனயனே
ஜனகனின் மகளை மணந்த ரகுவரனே
சனகாதியோரமரரிந்திரன் பணிந்திடும்
வனமாலை கௌத்துபமணிந்த கேசவனே
வினைப் பயனால் நான் படுந்துயரங்கள்
அனைத்தும் நீங்கிட கோதண்ட ராமனே
உனையன்றி வேறு யார் இப்புவியில் உள்ளார்
தினகர குலத்துத்தித்த ஶ்ரீ ரகு ராமா
No comments:
Post a Comment