பரே ஜனனி பார்வதி ப்ரணதபாலினி ப்ராதிப
ப்ரதாத்ரி பரமேஶ்வரி த்ரிஜகதாஶ்ரிதேஶாஶ்வதே ।
த்ரியம்பக குடும்பினி த்ரிபதஸங்கினித்ரீக்ஷணே
த்ரிஶக்திமயி வீக்ஷணம் மயி நிதேஹிகாமாக்ஷி தே ॥ 93॥
தாயே! பார்வதியே! நமஸ்கரிப்பவர்களை காப்பவளே! ஞானத்தைத் தருபவளே! பரமேச்வரியே! மூவுலகங்களுக்கும் ஆச்ரமாயிருப்பவளே! நித்யமாயிருப்பவளே! முக்கண்ணன் மனையே! கர்ம, ஞான, பக்திமார்க்க ஸம்பந்தமுள்ளவளே! இச்சா,ஞான,க்ரியா சக்தி ஸ்வரூபிணியாயுமுள்ள நீ என்னிடத்தில் கடாக்ஷத்தை வைப்பாயாக!
பார்வதி தேவியே…..
பல்லவி
பார்வதி தேவியே பரிந்தருள் புரிவாயே
கார்வண்ணன் கேசவன் சோதரி மாயே
அனுபல்லவி
பார் புகழும் பர்வத ராஜனின் சேயே
நாற்கவிகள் புகழும் உமா மகேச்வரியே
சரணம்
கர்ம ஞான பக்தி மார்க்கம் தருபவளே
இச்சை ஞான கிரியை சக்தியே
முக்கண்ணன் மனைவியே மூவுலகுமாள்பவளே
சர்வமும் நீயே துதிப்பவரைக் காப்பவளே
No comments:
Post a Comment