அவிச்ராந்தம் பத்யுர் - குணகண -
கதாம்ரேடனஜபாஜபாபுஷ்பச்சாயா தவ ஜனனி ஜிஹ்வா
ஜயதி ஸாயதக்ராஸீநாயா:
ஸ்படிகத்ருஷ தச்சச்சவி -
மயீஸரஸ்வத்ய மூர்த்தி:
பரிணமதி மாணிக்யவபுஷா
- ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகம்
பொதுப்பொருள்: அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.
தேவரும் மூவரும்…..,
பல்லவி
தேவரும் மூவரும் யாவரும் வணங்கிடும்
தாயே ஶ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே
அனுபல்லவி
தேவி கேசவன் சோதரி நீயே
பூவிலமர் நாமகளும் நீயெனப் பணிந்தேன்
சரணம்
விடைவாகனனினிடம் கொண்ட நாயகியே
இடையறாது உன் நாதன் கீர்த்திதனை
தடையின்றி உரைத்திடுமுன் நாக்கு
அடைந்தது செம்பருத்தி மலரின் சிவப்பு
அடைந்த அந்த செந்நிற நா நுனியில்
படைப்பவன் துணைவி குடியிருக்கக் கண்டேன்
உன் நா நிறத்தால் கலைவாணி நிறமும்
செந்நிற மாணிக்க ஒளிவடிவானது
No comments:
Post a Comment