Thursday, 21 October 2021

மீனாக்ஷி தேவியின்….

 ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம் (Meenakshi Pancharatnam) பாடல் வரிகள் மற்றும் பாடல் பொருளுடன் இந்த பதிவில் உள்ளது…

1.உத்யத்பானுஸஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூரஹாரோஜ்வலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததந்த பங்க்திருசிராம் பீதாம்பராலங்க்ருதாம் I
விஷ்ணு ப்ரஹ்மஸுநேந்திர ஸேவிதபதாம் தத்வஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம் நிதிம் II

ஆயிரம் ஆயிரம் சூர்யர்கள் உதித்ததுபோல் இருப்பவளும், தோள்வாளை, முக்தாஹாரம் இவற்றையணிந்தவளும், கோவைப்பழம் போன்ற உதடும், சுத்த வெள்ளை புன்முறுவல், பீதாம்பரம் இவற்றால் அழகியவளும், விஷ்ணு, பிரம்மா, இந்த்ரன் இவர்கள் ஸேவிக்கும் தத்வஸ்வரூபமுள்ள, மங்கள கருணைக் கடலை, ஸ்ரீ மீனாக்ஷியை நமஸ்கரிக்கிறேன்.

2.முக்தாஹார லஸத்கிரீட ருச்ராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்ஜந்நூபுர கிங்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம் I
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமாஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

முத்துமாலையும், கிரீடமும் அணிந்து பூர்ண சந்திரன் போன்ற முகப்பொலிவுடன் விளங்குகிறாள் மீனாக்ஷி. ஒளிக்கின்ற காற் சதங்கை மணிகளைக் கொண்டவளாய், தாமரை மலரையத்த ப்ரபையுடனும் இருக்கிறாள். அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றி, ஸரஸ்வதீ-லக்ஷ்மீ தேவியரால் சேவிக்கப்பட்டும், கருணைக்கடலாயும் மிளிர்கின்ற ஸ்ரீமீனாக்ஷியை நமஸ்கரிக்கிறேன்.

3.ஸ்ரீவித்யாம் சிவவாமபாக நிலயாம் ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்துமத்யவஸதிம் ஸ்ரீமத்ஸபாநாயகீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

ஸ்ரீவித்யையாகவும், சிவனின் இடது பாகத்தில் ஹ்ரீம் என்ற மந்த்ரத்தால் பிரகாசிப்பவளாயும், ஸ்ரீ சக்ரத்தில் பிந்து நடுவே வசிப்பவளாயும், ஸபாநாயகியாகவும், ஸ்ரீ ஷண்முகர், கணபதி ஆகியோரின் மாதாவாகவும், ஜகத்தை ஆகர்ஷிப்பவளாயும். கருணைக் கடலாயுமுள்ள ஸ்ரீமீனாக்ஷியை நமஸ்கரிக்கிறேன்.

4.ஸ்ரீமத் ஸுந்தரநாயகீம் பயஹராம் ஜ்ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாஸனார்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம் I
வீணாவேணு ம்ருதங்கவாத்ய ரஸிகாம் நாநாவிதா டம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

பயத்தைப் போக்கி ஜ்யானத்தையளிக்கும் நித்யசுத்த அழகம்மையாக கரிய திருமேனியுடன் காட்சி தருகிறாள். அவள் பிரம்மன் போற்றும் திருவடியுடையவள். ஸ்ரீ நாராயணரின் ஸஹோதர். வீணை, புல்லாங்குழல், மிருதங்கம் முதலிய வாத்யங்களை ரஸிப்பவள், பற்பல ஆடம்பரம் உடையவள். அந்த கருணைக்கடலான மீனாக்ஷியை நமஸ்கரிக்கிறேன்.

5.நாநாயோகி முனீந்த்ரஹ்ருந்நிவஸதிம் நாநார்த்தஸித்தி ப்ரதாம்
நாநாபுஷ்ப விராஜிதாங்க்ரியுகலாம் நாராயணே நார்சிதாம் I
நாதப்ரஹ்ம மயீம் பராத்பரதராம் நாநார்த்தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

பற்பல யோகிகள் முனிவர்கள் ஆகியோரின் ஹ்ருதயத்தில் குடிகொண்டு பற்பல ஸித்தியருளுபவள். பலவித புஷ்பங்களால் திருவடியில் பூஜிக்கப்பட்டவள். ஸ்ரீ நாராயணரின் போற்றுதலுக்குறியவள். நாதப்ரஹ்மமானவள். பரத்திற்கும் பரமானவள். தத்ஸ்ரூபிணியுமானவள். அந்த மீனாக்ஷியை நமஸ்கரிக்கிறேன்.

                                                          மீனாக்ஷி தேவியின்….

                                                                பல்லவி.

                                                மீனாக்ஷி தேவியின் பாதம் பணிந்தேன்

                                                தேனார் மொழியாள் கருணைக் கடலெனும்

                                                               அனுபல்லவி

                                                 வானுறை தேவரும்  சுகசனகாதியரும்

                                                 பானுவும் மதியும் யாவரும் வணங்கிடும்

                                                               சரணங்கள்                                            

                                                 முத்துமாலை தோள்வளை பீதாம்பரமணிந்து

                                                 முத்துப் பற்களும் கோவைச்செவ்விதழுடனும்   

                                                 எத்திசையும் ஒளிதரும் கோடி சூர்யத் தேசுடனே

                                                 பத்மநாபன் கேசவன் பிரமனிந்திரன் வணங்கும் ….( மீனாக்ஷி ….)


                                                 பூரண சந்திரன் போல் முகப்பொலிவுடையவள்

                                                 கிரீடம் காற்சலங்கை மணிமாலையணிந்தவள்

                                                 சரச்வதி திருமகளனைவரும் பணிந்தேத்தும்

                                                 அரவிந்த மலரொத்த கழலடி உடைய ……( மீனாக்ஷி…..)      


                                                 ஶ்ரீ சக்கரம் நடுவிலழகுடன் அமர்ந்தவள்

                                                 ஈசனிடப்புறத்தில் மந்திரப் பொருளாயிருந்து       

                                                 நேசமுடன் கணபதி முருகன் தாயாகவும்

                                                 பாசமுடனுலகை அரவணைத்துக் காக்கும்…..( மீனாக்ஷி …..)


                                                 அச்சம்தனைப்  போக்கி ஞானமளிப்பவள்   

                                                 மெச்சுமழகுடையவள்  கரிய நிறம் கொண்டவள்

                                                 அச்சுதன் சோதரி ஆடம்பரப்பிரியை

                                                  யாழிசை மத்தளம் குழலிசை விரும்பும்….( மீனாக்ஷி…..)


                                                  முனிவர்கள் யோகியர் மனங்களிலிருப்பவள்

                                                  தனிக்கருணை தந்து  நலன்களையளிப்பவள்

                                                  இனிய மலர் தூவி துதிக்கப்படுபவள்

                                                  கனிவுடன் மால் போற்றும் பரம்பொருளான…..( மீனாக்ஷி ….)

                                                                                                                                              

                                                 

                                                      

                                                

                                                 

                                                                                                                       

                                                                                                                                           

                 

                                             

No comments:

Post a Comment