தாயே ஶ்ரீலலிதே……
பல்லவி
தாயே ஶ்ரீலலிதே உனையே துதித்தேன்
நீயே வந்தெனக்கு அருள் புரிவாயே
அனுபல்லவி
மாயே பைரவியே மகிடனை மாய்த்தவளே
ஆயர் குலத்துதித்த கேசவன் சோதரியே
சரணம்
தீயை நுதலில் வைத்திருக்கும் மலைமகளே
ஆய கலைகளனைத்தையுமளிப்பவளே
தூய மலர் தூவியுன் மலர்ப்பாதம் பணிந்து
வாயார உன் நாமம் அனுதினமுரைத்து
No comments:
Post a Comment