கமல மலரேந்தும்….
பல்லவி
கமல மலரேந்தும் காமாக்ஷி தேவி
கமல பதம் பணிந்தேன் காத்தருள்வாயே
துரிதம்
அமரரும் முனிவரும் அமரேந்திரனும்
கமலாசனனும் காமனும் பணிந்திடும்
அனுபல்லவி
கமலநாபன் கேசவன் சோதரி
கமலகரத்தாளே கௌரிமனோகரி
சரணம்
உமையொருபாகனினிடம் கொண்டவளே
இமவான் மகளே பர்வத வர்த்தினி
சமமென ஒருவருமில்லாதவளே
உமா மகேச்வரி திரிபுர சுந்தரி
No comments:
Post a Comment