தென்னாங்கூர் பாண்டுரங்கன்
பல்லவி
என் துணை நீயே பாண்டுரங்கா
உன்னடியே சரணம் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
கன்ம வினைப்பயனால் யான் படுந்துயர் நீங்க
உன்னருளொன்றே போதுமெனத் துதித்தேன்
சரணம்
நன்னெறி யறிவும் கல்வியும் செல்வமும்
தன்னலம் கருதாப் பிறர்க்குதவும் பண்பும்
சொன்ன சொல் தவறாத நேர்மையும் வேண்டுமென
தென்னாங்கூர் தலத்துறையும் கேசவா உனைப்பணிந்தேன்
No comments:
Post a Comment