கண்ணன்மங்கை பக்தவத்சலன்
பல்லவி
புகழும் பொருளும் வேண்டேன் கேசவா
சகமனிதர்களின் அன்பொன்றே வேண்டினேன்
அனுபல்லவி
சகம்புகழும் திருக்கண்ணன்மங்கை வளர்
பக்தவத்சலனே உனதடி பணிந்தேன்
சரணம்
அகமும் புறமும் துப்புரவுடனே
திகழ்ந்திடும் வண்ணம் செய்திட வேண்டியே
முகுந்தனே மாதவா உனையே துதித்தேன்
இகபரம்தனிலே சுகமளிப்பவனே
No comments:
Post a Comment