புண்டரீகாக்ஷன்
பல்லவி
புண்டரீகக்ஷனைத் தாமரைக்கண்ணனை
கண்ணாரக்கண்டு மனமாரத் துதித்தேன்
அனுபல்லவி
அண்டர்கோனை அரவிந்த நாபனை
தொண்டர் தொழுதேத்தும் மதுசூதனனை
சரணம்
பண்டு அரக்கர் குலமழித்த கேசவனை
உண்டு உலகுமிழ்ந்த மாயக்கண்ணனை
கண்டவர் மனங்கவரும் பேரெழில் கொண்டவனை
வண்டமர் சோலை சூழ் திருவெள்ளறை வளர்
No comments:
Post a Comment