கமலவல்லி நாதன்
பல்லவி
கமலவல்லி நாதன் கார்வானரைப் பணிந்தேன்
சமயமிதுவே என்று எனைக்காக்க வேண்டி
அனுபல்லவி
கமலமலர்தனை நாபியில் வைத்திருக்கும்
அமலனாதிபிரான் அருள் தரும் கேசவன்
சரணம்
கமலமலரமர் பிரமனும் ஈசனும்
நமஸ்கரித்திடும் தாமரைப்பாதன்
சமம் தனக்கெவரும் இல்லாத இறைவன்
கமல பதம் துதிக்கும் அடியார்க்கு நேசன்
No comments:
Post a Comment