மாலன்
பல்லவி
நாளும் நாராயணனே உனதருள் வேண்டி
தாளினைப் பணிந்தேன் தயைபுரிந்திடுவாய்
அனுபல்லவி
மீளாத் துயரில் நானுழல்வது கண்டும்
வாளாவிருப்பது உனக்கழகோ கேசவனே
சரணம்
தாளேன் இனியுமுனது பாராமுகம்
வாளும் சக்கரமும் சங்கும் கையிலேந்தும்
மாலே மனம் கனிந்து ஏளனம் செய்யாமல்
ஆள வேண்டுமென அடிமைநானுனைத்துதித்தேன்
No comments:
Post a Comment