தானரூபி
பல்லவி
தானரூபியே லலிதாம்பிகையே
கானமியற்றியுன் பாதம் பணிந்தேன்
அனுபல்லவி
ஞானமும் இசையில் தேர்ச்சியும் யான்பெற
நீயெனக்கருள்வாய் திரிபுரசுந்தரி
சரணம்
தானமும் தவமும் நன்னறியறிவும்
நானென்றும் பெற்றிட உனையே துதித்தேன்
மான்விழியாளே கேசவன் சோதரி
வான்புகழ் மீயச்சூர் தலத்துறை ஈச்வரி
No comments:
Post a Comment