வடிவேலன்
பல்லவி
வினைதீர்க்கும் வேலிருக்க துணையாக மயிலிருக்க
எனைக்காக்க நீயிருக்க முருகா இனி குறையேது
அனுபல்லவி
தினைப் புனத்தில் கண்டு மனத்தில் மோகம் கொண்டு
வனக்குறத்தி வள்ளியை மணந்த வடிவேலா
சரணம்
அனைத்துக்குமுதலான ஆறுமுகப் பெருமானே
முனைந்து துதித்திடுமடியாரைக் காப்பவனே
அனங்கனையீன்ற கேசவன் மருகோனே
சுனைநீராய்க் கருணை சுரந்திடும் குமரனே
No comments:
Post a Comment