மூகாம்பிகை
பல்லவி
முக்கண்ணியைக்கொல்லூர் மூகாம்பிகையை
பக்தியுடன் போற்றிப் பதமலர் பணிந்தேன்
அனுபல்லவி
அக்னி வைத்த நெற்றிக் கண்ணுடைய
ஆதிசிவன் பாதியை திரிபுரசுந்தரியை
சரணம்
வக்கிரக்காளியாய் அவதரித்து திரு
வக்கரையிலெழுந்தருளிக் காட்சியளித்திடும்
சக்கரக்கையன் கேசவன் சோதரியை
முக்தியளித்திட வேண்டுமெனத் துதித்து
No comments:
Post a Comment