சாரங்கபாணி
பல்லவி
ஆராவமுதனே ஆதிகேசவா
தீராமனக்கவலை தீர்த்தெனையாண்டருள்
அனுபல்லவி
ஓராயிரம் நாமம் பாராயணம் செய்தேன்
மாறாத பக்தியுடன் மலர்ப் பதம் சரணடைந்தேன்
சரணம்
சேராத இடம் சேர்ந்து சிறுமதியால் சீரழிந்தேன்
நாராயணனே உனதருளால் மனம் திருந்தி
நேரான வழி தேர்ந்து உன்னையே தினம் துதித்தேன்
சாரங்கபாணியே திருக்குடந்தைத்தேனே
No comments:
Post a Comment