தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரலந்தது எங்கே?--
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.
ஏ, அபிராமி! நீ உண்மை பொருந்திய நெஞ்சைத் தவிர வஞ்சகர்களுடைய பொய் மனத்தில் ஒருபோதும் வந்து புகுந்தறியாதவள். பூங்குயில் போன்றவளே! உன்னுடைய பாதத்தாமரையைத் தலையில் சூடிக் கொண்ட சிவபெருமானாகிய சங்கரனின் கையிலிருந்த தீயும், முடிமேல் இருந்த ஆறும் (ஆகாய கங்கை) எங்கே ஒளிந்து கொண்டனவோ?
அபிராமி (98)
பல்லவி
சதமென உனையே அனுதினம் துதித்தேன்
கதி நீயே தாயே அபிராமவல்லி
அனுபல்லவி
நிதம் பணியும் மெய்யடியார் நெஞ்சில்
நிலைத்திருப்பவளே கேசவன் சோதரி
சரணம்
முதம் தரும் அன்னையே சங்கரி உனது
பதம் சூடிய சிவன் கையில் வைத்த தீயும்
இதம் தரும் புனலும் இடம் மாறிச் சென்றதுவோ
கதம்ப வனம் தனில் வீற்றிருப்பவளே
No comments:
Post a Comment