மனமுனது .........
பல்லவி
மனமுனது திருவடியில் லயித்திட வேண்டியே
தினமுனைத் துதித்தேன் சென்ன கேசவா
அனுபல்லவி
அனந்தபத்மனாபனே ஆதிமூலமே
உனதருளில்லையேல் உலகுயிர் நிலைக்குமோ
சரணம்
வனவிலங்கென மனம் தறிகெட்டோடி
தனம் புகழ் பதவி அனைத்துமே சதமென
நினைந்து செருக்குடனதில் திளைத்திருந்தேன்
புனிதனே கேசவா இம்மாயை நீங்கி
No comments:
Post a Comment