சிவசுதன்
பல்லவி
சிவசுதனைக் கரிமுகனை அனுதினம் துதித்தேன்
பவ பயம் நீங்கிடவும் பரகதியடைந்திடவும்
அனுபல்லவி
அவனியோர் போற்றும் ஆனைமுகத்தோனை
புவனமுண்டுமிழ்ந்த கேசவன் மருகனை
சரணம்
தவம் செய்யும் முனிவரும் தேவரும் பிரமனும்
சிவகணங்களும் நந்தியும் பணிந்தேத்தும்
நவசக்தி கணபதியை வாரண முகனை
கவலை பிணி யிடர் விலகிடச் செய்திடும்
No comments:
Post a Comment