அன்பும் கருணையும்
பல்லவி
அன்பும் கருணையும் நிறைந்த மாதவா
உன்னடி பணிந்தேன் இன்னருள் புரிவாய்
அனுபல்லவி
துன்பம் சூழ்ந்திடும் வேளையிலெல்லாம்
உந்தன் நாமமே ஓதித் துதித்தேன்
சரணம்
பன்னக சயனனே பாற்கடல் வாசனே
தன்னிகரில்லா உன்னதத் தெய்வமே
அன்னை செங்கமலம் அருகிருந்து போற்றும்
சென்ன கேசவா நீயேயென் துணை
No comments:
Post a Comment