சௌம்யநாராயணன்
பல்லவி
இரக்கம் பிறக்காததேனோ கேசவா
மறக்காமல் தினம் துதிக்கும் ஏழையென் மீது
துரிதம்
நரர்சுரர் முனிவர்கள் அரனயன் நாரதர்
சுரபதி போற்றும் மதுசூதனனே
அனுபல்லவி
சரணடைந்த என்னை வெறுத்தொதுக்கலாமோ
உரகமெல்லணையானே சௌம்யநாராயணனே
சரணம்
நிரந்தரமில்லாத மாய உலகில்
நிரந்தரமானவனே புரந்தரவிட்டலா
அரவணை துயிலும் கோட்டியூர் பிரானே
அரவணைத்தெனையே ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment