ஶ்ரீ லலிதாதிரிபுரசுந்தரி ( இராகமாலிகை )
பல்லவி
திருநாமமாயிரம் சொல்லியழைத்தேன்
அருமறைகள் போற்றும் ஶ்ரீலலிதாம்பிகையே
அனுபல்லவி
பெருமைக்குரிய திருமீயச்சூர் வளர்
கருணைக்கடலே கேசவன் சோதரி
சரணம்
சங்கரி என்னைக் காத்தருள்வாயே
சங்கரன் பங்கிலுறைபவள் நீயே
அங்கயற்கண்ணி நீ ஆதிபராசக்தி
மங்களம் தந்திடும் கௌரிமனோகரி
சிங்கவாகனம்தனிலமரீச்வரி
எங்கும் நிறைந்திருக்கும் தேவமனோகரி
அங்குசம் பாசம் ஏந்தும் பரமேச்வரி
சங்கடம் களைந்தருள்வாய் உமாமகேச்வரி
பொங்கும் மூவாசைப்பிணிதனையே போக்கும்
திங்கள் பிறைநுதலாளே திரிபுரசுந்தரி
மங்காத புகழ்மேவும் வையச்சேரிவளர்
மங்களம்பிகே சரச்வதிமனோகரி
பொங்கரவுக்குடையின் கீழ் மங்களமாய் வீற்றிருக்கும்
பங்கயபதத்தினளே ஓங்காரி மாரி
சங்கும் சக்கரமும் ஏந்தும் அரிசோதரி
எங்கும் எதிலும் வெற்றி தரும் ஜயமனோகரி
திங்களும் ஞாயிறும் தேவரும் முனிவரும்
அங்கம் கரைந்து துதித்துப் போற்றும்
குங்குமக்காரி கருமாரி கௌரி
எங்களுக்கருள்வாய் கமலாமனோகரி
சிங்காரவேலன் அன்னையே பார்வதி
பங்கயகரத்தாளே பர்வதவர்த்தனி
சிங்கவாகனி ரமாமனோகரி
இங்கெழுந்தருளி எமக்கருள்புரிவாய்
நங்கநல்லூர் வளர் ராஜராஜச்வரி
மங்கையர் துதித்திடும் ஈசமனோகரி
கங்காதரீச்வரர் மனம் கவர் காமேச்வரி
துங்கக்கரிமுகனின் தாயே பராசக்தி
No comments:
Post a Comment