திருவண்வண்டூர் கமலநாதன்
பல்லவி
இன்னமும் என்னையே சோதித்தால் கேசவா
ஏழையேன் என்செய்வேன் எங்கு செல்வேன்
அனுபல்லவி
பன்னகசயனனே பாம்பணையப்பனே
உன்னையல்லால் துணை வேறெவருள்ளார்
சரணம்
மன்னன் நகுலன் நாரதர் நான்முகன்
அன்னை கமலவல்லியனைவரும் துதித்திடும்
உன்னத திருத்தலம் திருவண்வண்டூருறையும்
தன்னிகரில்லாத கமலநாதனே
No comments:
Post a Comment