திரிபுரசுந்தரி
பல்லவி
திரிபுரசுந்தரி ஶ்ரீலலிதாம்பிகே
அரியயனரன் பணி உனதடி பணிந்தேன்
அனுபல்லவி
மரித்தலும் பிறத்தலும் இல்லாமல் செய்திடும்
பெருமைக்குரிய கேசவன் சோதரி
சரணம்
விரிசடையில் புனலேந்தும் சிவனிடம் கொண்டவளே
கரிமுகன் சரவணன் வணங்கிடும் தாயே
கிரிராஜன் மகளே உமாமகேச்வரி
பரிந்தெனக்கருள வேண்டுமெனத்துதித்து
No comments:
Post a Comment