மீயச்சூரீச்வரி
பல்லவி
பொன்மலை மீது குடிகொண்டிருக்கும்
அன்னயே ஶ்ரீ மகா திரிபுரசுந்தரி
அனுபல்லவி
என்மனக் கோயிலிலெழுந்தருளியெனைக்காக்க
உன்பதம் பணிந்தேன் கேசவன் சோதரி
சரணம்
பொன்னாலும் பொருளாலும் பெறவியலாப்பேரின்பம்
உன்னால் மட்டுமே அளித்திட முடியுமென
என்னாளும் எப்போதும் உன்னையே துதித்தேன்
அன்னையே மீயச்சூர் தலம் வளரீச்வரி
No comments:
Post a Comment