பண்டரிபுரத்தரசன்
பல்லவி
பண்டரி புரத்தரசே பாண்டுரங்கவிட்டலா
தண்டனிட்டுத் தாள் பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
அண்டசராசரங்களனைத்தையும் காப்பவனே
உண்டுலகுமிழ்ந்த ஆய்ப்பாடிக் கேசவனே
சரணம்
கண்டவர்கள் மனங்கவரும் பேரழகுடையவனே
தொண்டு செய்யும் பக்தர்களின் விருப்பம் தீர்ப்பவனே
பண்டு மூவடியால் உலகளந்த வாமனனே
புண்டரீகாக்ஷனே புருஷோத்தமனே
No comments:
Post a Comment