அபயப்ரதன் (திருவித்துவக்கோடு)
பல்லவி
எத்தனை சொன்னாலும் உன் திருநாமம்
தித்திக்குமே வாய் மணக்குமே கேசவா
அனுபல்லவி
வித்துவக்கோட்டிலுறை உய்யவந்தப்பெருமாளே
நித்தமுன் மலர்ப்பதம் மனமாரத்துதித்தேன்
சரணம்
வித்துவக்கோட்டுவல்லி பத்மபாணித்தாயாரும்
உத்தமப் புத்திரர்கள் பஞ்சபாண்டவரும்
சித்தத்திலிருத்தி சீரடி போற்றி
பக்தியுடன் பணிந்தேத்தும் அபயப்ரதனே
No comments:
Post a Comment