கேசவன்
பல்லவி
என்றும் என்னருகில் நீ நின்றிருக்கக் கேசவனே
வென்றிடுவேன் வாழ்வினில் வருந்துயரனைத்தையும்
அனுபல்லவி
கன்றின் குரல்கேட்டு ஓடி வரும் தாய்ப்பசுவாய்
இன்றும் எனக்கருளக் காத்திருக்கும் திருமாலே
சரணம்
அன்றிலங்கை சென்று அரக்கருடன் போரிட்டு
வென்றவரின் பகை முடித்து சீதையை மீட்டவனே
குன்றைக் குடையாக்கி குவலயம் காத்தவனே
உன்றன் மலர்ப் பதம் ஒன்றே என்றன் துணை
No comments:
Post a Comment