சிங்காரவேலன்
பல்லவி
இல்லாத இடமும் உண்டோ முருகா (நீ)
எல்லாமே நீயென்று அறிந்த பின்னாலே
அனுபல்லவி
கல்லாரும் கற்றவரும் எல்லோரும் துதித்திடும்
செல்வ குமாரனே கேசவன் மருகனே
சரணம்
பொல்லாத சூரனை வதம் செய்தவனே
நல்லோர் மனங்களில் நடம்புரிபவனே
உல்லாசமாய் வள்ளி தெய்வானையுடனே
சல்லாபம் செய்திடும் சிங்காரவேலனே
No comments:
Post a Comment