திருமீயச்சூர் திரிபுரசுந்தரி
பல்லவி
எந்நாளுமுனையே எண்ணித் துதித்தேன்
பன்னகபூஷணி ஶ்ரீலலிதாம்பிகையே
அனுபல்லவி
அந்நாளில் திரிபுரம்தனையெரித்தவளே
உன்னருளொன்றே என்றும் வேண்டினேன்
சரணம்
உன்னால் முடியாத செயலொன்றுமில்லை
கன்னலே தேனே கேசவன் சோதரி
என்னை ஆண்டருளத் தருணமிதுவே
தென்னாட்டில் மீயச்சூர் தலத்துறைபவளே
No comments:
Post a Comment