பரதெய்வம் வேறில்லை
பல்லவி
அரங்கனவனன்றி வேறோர் தெய்வம்
பரந்த இவ்வுலகில் காண முடியுமோ
அனுபல்லவி
நரர்சுரர் சுரபதி பசுபதி ரதிபதி
சரஸ்வதியின் பதி துதித்திடும் ஸ்ரீ பதி
சரணம்
கரங்களில் சங்கும் சக்கரமுமேந்தும்
பரந்தாமன் கேசவன் பரம தயாநிதி
அரங்கநாயகி மனங்கவர் திருமார்பன்
வரங்களைத் தந்தருளும் தாமரை மலர் நாபன்
No comments:
Post a Comment