Friday, 10 July 2015

பற்றறுத்திடவே


                   பற்றறுத்திடவே...


பல்லவி

பற்றறுத்திடவே பற்றினேன் உன் பதம்

உற்ற துணை நீயே சென்ன கேசவா

அனுபல்லவி

நற்றவ முனிவரும் கற்றறிந்தோரும்

கரம்பணிந்தேத்தும் கலியுகத்தெய்வமே

சரணம்

உற்றார் சுற்றமும் நண்பனும் நீயே

பெற்ற தாயும் தந்தையும் நீயே

சுற்றித் திரிந்திவ் வாழ்வினைத் தொலைத்தேன்

மற்றுமோர் பிறவி இனியான் வேண்டேன்

No comments:

Post a Comment