திருவேங்கடமுடையோன்
பல்லவி
நீயருள்வாய் சென்ன கேசவா
தாயும் தந்தையுமான தயாபரனே
அனுபல்லவி
தேயாத புகழ் மேவும் திருவேங்கடமுடையோனே
தூய மனத்தோடு அனுதினமுனைத் துதித்தேன்
சரணம்
நோயெனுமிருவினைப் பயன்களில் சிக்குண்டு
மாயத்தரணியில் மனம் போன போக்கெல்லாம்
ஓயாது திரிந்தேன் உனதருளாலின்று
நீயே கதியெனத் தாளினைச் சரணடைந்தேன்
No comments:
Post a Comment