உமாமகேச்வரன்
பல்லவி
சதாசிவனுனையே சதா துதித்தேன்
சிதாகாசம்தனில் பிரகாசமாய் விளங்கும்
அனுபல்லவி
பதாரவிந்தம் பணிந்திடுமெனையே
வதான்யேச்வரனே பாலித்தருள்வாய்
சரணம்
உதாரசீலன் உமாமகேச்வரனுன்
கதாம்ருதபானம் பருகிடுமெனையே
உதாசீனம் செய்யாமல் கனிவுடன்
நிதானமாய்க் காத்து ஆண்டருள்வாயே
No comments:
Post a Comment